சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய சிறைக் கைதி, துரத்திப் பிடிப்பு!

0
170

வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சிறைக் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற நிலையில், துரத்திப் பிடிக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வவுனியா வைத்தியசாலையை அண்மித்துள்ள வயல்வெளியில் ஓடிய நிலையில், சிறை அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்று அவரைக் கைதுசெய்தனர்.

இதனை நபர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.