சீனாவில் திருமண வயதெல்லையில் மாற்றம்!

0
32

சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18ஆக குறைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி சீனாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிப்பதற்காக இருபாலாருக்குமான திருமண வயதை 18ஆக குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருமண செலவுகள் மற்றும் குழந்தை பராமரிப்பினை  கருத்திற் கொண்டு பெரும்பாலான சீனர்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.