26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி!

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்று நாடுகள் இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டியிடப் போகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஜப்பான், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து 2035ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களின் சிறப்புப் படையை அறிமுகப்படுத்தவுள்ளன.

இந்த திட்டம் Next Generation Fighter Jets என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, இந்த திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை தயார் செய்யும் பொறுப்பு ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இதற்கான Assembling பிரித்தானியாவில் நடைபெறுவதுடன் இத்தாலியின் Aeronautical Department சில முக்கிய பாகங்களை தயார் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தயாரிக்கப்படும் அனைத்து போர் விமானங்களும் SuperSonic ஆக இருக்கும்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) இந்த சர்வதேச ஒப்பந்தம் குறித்து சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் தலைமையகமாக பிரித்தானியாவின் Global Combat Air Programme (GCAP) இருக்கும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.இந்த திட்டத்திற்கான பணிகள் ஜப்பான், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளிலும் ரகசியமாகவும்  மிக வேகமாகவும் நடைபெறுகின்றதுடன் 2035 மார்ச் இல் இந்த போர் விமானத்தின் படைகளில் ஒன்று வானில் பறக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த திட்டத்தின் சோதனை வசதி மற்றும் பராமரிப்புப் பொறுப்பு என்பன பிரித்தானியாவின் ரோயல் விமானப்படையிடம் (Royal Air Force) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.

இந்த Stealth Fighter Jet-களுக்காகத் தயாராகும் ரேடார்கள், தற்போது இருக்கும் ரேடார்களை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமான தரவுகளை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுத அமைப்பு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டதாக இருக்கும் மற்றும் ஊடுருவல் செய்யப்படமாட்டாது.இது குறித்து வெளியாகிய தகவல்களின்படி, இந்த திட்டத்திற்காக மூன்று நாடுகளும் ஆரம்பத்தில் 6 பில்லியன் டொலர்கள் செலவிடுகின்றன.

இந்தத் திட்டத்தில் பணியாற்ற பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலியை அமெரிக்கா தயார்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதற்கான முயற்சிகள் 2020 டிசம்பரில் தொடங்கியது.

ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொழில்நுட்ப சிறப்பிற்கு பிரித்தானியா அதன் உற்பத்தி வசதிகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. பின்னர் மூன்று நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டன.

உண்மையில், அமெரிக்காவும் இந்த மூன்று நாடுகளும் திட்டத்தின் நோக்கம் பற்றி எதுவும் கூறாமல் இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் சீனாவைச் சுற்றி வளைப்பதாகும்.

இதற்காக ஜப்பானின் ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் அடையாளம் வெளியிடப்படமாட்டாது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles