சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழப்பு

0
58

சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 39 ஆயிரத்து 522 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இடர்முகாமைத்துவ நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கம்பஹா, கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, காலி, பொலன்னறுவை, கண்டி, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தினால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.களுத்துறை, மில்லனியவில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட ஒருவரும் கொழும்பு கடுவலை மற்றும் கொலன்னாவையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.