சுகாதார பணியாளர்கள் அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்- சமன் ரட்ணப்பிரிய

0
580

கொவிட் அச்சம் காரணமாக பொதுமக்கள் சுகாதார பணியாளர்களுடன் பேருந்துகளில் பயணிக்க விரும்புவதில்லை என தெரிவித்துள்ள அரச தாதிமார் சங்கத்தின் தலைவர் சமன் ரட்ணப்பிரிய, கொவிட் வோர்ட்களில் பணியாற்றிய களுபோவிலை வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அவர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் மூன்றாவது அலையின் போது இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் இக்காலப்பகுதியில் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் சுகாதார பணியாளர்களிற்கு போக்குவரத்து வசதிகளை கூட வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
4000 தாதிமார் இரண்டாவது டோஸினை பெறாத நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள சமன் ரட்ணப்பிரிய அதேவேளை சமீபத்தில் மருத்துவர்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.