சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

0
95

சுங்கத் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தில் உதவி அத்தியட்சகர்கள் மற்றும் சுங்கப் பரிசோதகர்கள் பதவிகளுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகத் தெரிவித்து குறித்த மோசடியாளர்கள் ஆட்சேர்ப்பில் ஈடுபடும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோசடியில் ஈடுபடுபவர்கள் விண்ணப்பதாரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுங்கத் திணைக்களத்தின் நடைமுறைக்குப் புறம்பாக எந்த அதிகாரிகளையும் உள்வாங்க முடியாது என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.