சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரச் சென்ற விண்கலம்!

0
3

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர். ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம்இ ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது. 9 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா நிறுவனம் இணைந்து விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த விண்கலம் இன்றிரவு 11.30 அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் இருவரும் இந்த விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.