9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் ஆரோக்கியமாக உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் , வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் உதவியுடன் புளோரிடா கடலில் தரையிறங்கினார்.
அதன் பின்னர் இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மருத்துவ பரிசோதனைகளின் படி இருவரும் ஆரோக்கியமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இருவரின் உடலும் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது.