சுன்னாகத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட மூவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது!

0
224

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த வருட ஆரம்பத்திலிருந்து 15 ம் திகதி வரை சுன்னாகம் நகரப் பகுதியில் நான்கு இடங்களில் வீதியில் பயணிக்கும் வயோதிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு சங்கிலி திருடிய நாலு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் நகை கடை உரிமையாளர் இருவர் உட்பட ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 தங்கச் சங்கிலிகள் மீட்க்கப்பட்டுள்ள தோடு சந்தேகநபர் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது திருட்டு சம்பவம் தொடர்பில் சிசிடிவி கமரா பதிவுகளும் பார்வையிட்டு திருட் டு சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான அணியினர் துரிதமாக செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் புத்தூர் கலைமதி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது