முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உண்மைக்கு புறம்பாக, தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில், மன்னார் பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.