ஒரு இலட்சம் பேருக்கு நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தொற்நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 31,440 பேருக்கு சைனோபாம் முதலாவது தடுப்பூசியும் 66,423 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்புட்னிக் தடுப்பூசி 1,576 பேருக்கும் கொவிஷீல்ட் தடுப்பூசி 263 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை கொவிஷீல்ட் முதலாவது தடுப்பூசி 925,242 பேருக்கும் இரண்டாவதுத் தடுப்பூசி 355,675 பேருக்கும் சைனோபாம் முதலாவது தடுப்பூசி 1,326,784 பேருக்கும் இரண்டாவதுத் தடுப்பூசி 253,835 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்புட்டினிக் முதலாவது தடுப்பூசி 64,986 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 3,690 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.