செல்வச் சந்நிதியில் 70 பவுண் நகைகள் திருட்டு!

0
173

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் முறைப்பாடு வழங்கி உள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்று இடம்பெற்றது.
பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.