`சைனோஃபாம்` தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது
`டோஸ்` வழங்கும் நடவடிக்கை நாளை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து
ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க
அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த
ஒகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம்
மேற்கொண்டிருந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார். நாட்டில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி
ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.