ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட இணைப்பாளர்கள் சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இன்று காலை 10:30 மணியளவில் யாழ்.இருபாலையில் உள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கம் வகிக்கின்ற கட்சிகளான, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி EPRLF) மற்றும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த அதே வேளை ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை
வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரட்னம், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ந.கமலாகரன் உள்ளிட்ட யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.