எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தம் தொடர்பான எவ்விடயமும் சமர்ப்பிக்கப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர், 19ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கான தீர்வு தொடர்பான திருத்தங்களை தேர்தலுக்குப் பின்னர் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலை தாமதிக்கும் நோக்கிலேயே அரசமைப்பு திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.