ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை வர்த்தமானி இடைநிறுத்தம்!

0
74

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற 22ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை தாம் எடுத்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 2022 ஒக்ரோபர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.