ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி ஜனாதிபதித் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது. நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,71, 41 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
மக்கள் வாக்களிப்பதற்கு நாடளாவிய ரீதியாக 13, 421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
வாக்கெண்ணும் பணிகளுக்காக 1, 713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்