ஜனாதிபதியின் பிறந்ததினத்தை சிறப்பிக்கும் வகையில்,மட்டக்களப்பு பூநொச்சிமுனையில்சிறப்பு வழிபாடு

0
99

ஜனாதிபதியின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரபிரிவில் முஸ்லிம்களின் பிரார்த்தனை வழிபாடும் மரம் நாட்டு
விழாவும் நடைபெற்றது.
பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளவில் மரநடுகை இடம் பெற்றது.
இங்கு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும் நாட்டின் பொரு ளாதார நெருக்கடி நீங்கவும் நாட்டில் நல்லாட்சி நிலைத்திருக்கவும் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு,
காஸா மக்களுக்கு ஈடேற்றம் வேண்டியும் விசேட துவா பிரார்த்தனையும் நடைபெற்றது.
நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாநகர பிரிவின் வலய அமைப்பாளர் பீ.ரீ.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு
விசேட மரநடு கையையும் பழமரக்கன்றுகள் விநியோகத்தையும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கட்சியின் காத்தான்குடி பிரதேச வலய அமைப்பாளர் எம்.எஸ்.உமர்லெப்பை உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.