ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பஸில் ராஜபக்ஷவும் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி சந்தித்துப்
பேசவுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பஸில் ராஜபக்ஷ, ஜனவரி மாதம் நாடு திரும்புவார் என கூறப்பட்டது.
ஆனால், அவர் இன்றுவரை நாடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அவர் இந்த வாரம் நாடு திரும்புவார் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்யவே பஸில் அவசரமாக நாடு திரும்புகிறார் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நாடு திரும்பும் பஸில் ராஜபக்ஷ மார்ச் 3ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.