ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் சந்திப்பு!

0
52

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு இலங்கைக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையின் யானை- மனித மோதலுக்கு தீர்வு தேடுவதற்காக தென்னாபிரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. தெற்காசியாவில் செயற்படுத்தப்படும் சமாதான மற்றும் தேசிய மறுசீரமைப்பு செயற்பாடுகளை இலங்கையிலும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.