மலையக மக்கள் மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியில் இருந்த வேளை, மலையக மக்களுக்காக குரல் கொடுத்தார் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த தோட்டக் கமிட்டி தலைவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம், நேற்று ஹட்டனில், மலைய மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.
இதில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.