ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
‘பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டமை எனது தோல்வியில்லை. இது இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி’ எனக் குறிப்பிட்ட அவர் இதனைப் பற்றி எனக்கு எந்த பிரச்சினையுமில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் எனவும் இதனை முன்னரும் தான் உறுதியாகக் கூறியுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.