சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே, பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் ‘நீங்கள் பாகிஸ்தானின் உண்மையான நண்பராகவும் நலம் விரும்புபவராகவும் இருந்துள்ளிர்கள், எனது நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனவும் பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.