ஜனாதிபதி ரணில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

0
159

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா அயாஷியை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு ஜப்பான் ஹனீடா விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜப்பானிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர். தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இன்று நடைபெறும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதி சடங்கிலும் ஜனாதிபதி பங்கேற்கிறார்.