ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா, பொருளாதாரத்தை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.


கலந்துரையாடலின் போது, இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட பல முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுடன், கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


உலகளாவிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதி இராஜாங்க செயலாளர், செங்கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த நிலையில் இந்து சமுத்திரத்தில் கடற்படை சுதந்திரத்திற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் யு.எல்.எம். ஜௌஹர், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.