ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்த வாரம், அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில், எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில், மாநாடு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி, மாநாட்டில் உரையாற்றுவார் என, ஜனாதிபதி அலுவலக சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டை, இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சு, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு மற்றும் வர்த்தகத்துறை, சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் மற்றும் பேர்த் யுஎஸ் ஏசியா மையம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.