ஜனாதிபதி 12ஆம் திகதி வெளிநாடு பயணம்

0
65

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் ஆரம்பமாகவுள்ள 54ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி சுவிற்சர்லாந்து செல்லவுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி உகாண்டா செல்லவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு உகண்டாவில் ஆரம்பமாக உள்ளதுடன், 20ஆம் திகதிவரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.