யாழ். சாவக்கச்சேரியில் புத்தகக் கண்காட்சி!

0
60

புத்தக அரங்க விழாவின் இருபதாவது நிகழ்வு யாழ். சாவக்கச்சேரி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இம் மாதம் 28, 29, 30 ஆம் திகதிகளில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளதுடன் நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறுவதுடன் சிறுவர் நாடகங்களும் இடம்பெறவுள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நடைபெறவுள்ளது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘நூறு மலர்கள் மலரட்டும்’ என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக புத்தக அரங்க விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.