நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் 29 பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்தில் நாட்டில் 36 ஆயிரத்து 642 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.