டிசெம்பர் 20, எல்லை நிர்ணய ஆணைக்குழு – அரசியல் கட்சிகள் இடையே சந்திப்பு!

0
109

தேர்தல் பிரிவு எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடலை டிசெம்பர் 20 ஆம் நாள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடனும் சிறப்பு கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கருத்துக் கணிப்பு பணிப்பாளர் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன், உள்ளூராட்சி பிரிவுகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர்மேலும் தெரிவித்துள்ளார்