தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ், டிஜிட்டல் சேவை வரி விதிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சர்வதேச கூட்டு வரிவிதிப்புக்கான பரிந்துரை உள்ளடங்கிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.