டிரம்பின் அதிரடி முடிவு – பதிலடி கொடுக்கும் சீனா!

0
32

சில அமெரிக்க இறக்குமதி மீது இன்று முதல் அமுலாகும் வகையில் சீனா நேரடி இறக்குமதி வரிகளை விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல நாடுகள் மீது வரிகளை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது.

அனைத்து சீனப் பொருட்களுக்கும் அமெரிக்காவின் புதிய 10 சதவீத வரிகள் அமுலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பிறகு கடந்த 4 ஆம் திகதி சீனா இந்த பதிலடி குறித்து அறிவித்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து உலோக இறக்குமதிகளுக்கும் 25 சதவீத வரி விதிக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அத்துடன் ஏனைய நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர் எந்தெந்த நாடுகள் குறிவைக்கப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. முன்னதாக கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த வார இறுதியில் அறிவித்தார்.
எனினும் அந்த நாடுகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து ஏற்படுத்தப்பட்டிருந்த உடன்பாடுகளின் பின்னர் குறித்த தீர்மானம் கைவிடப்பட்டது.