டெங்கின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதால்
பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

0
169

காரைதீவு 11,12ஆம் பிரிவுகளில் டெங்கின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதால் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் இன்று இடம் பெற்றது கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலப் பிரிவுகளான காரைதீவு 11,12ஆம் பிரிவுகளில் அதிகமாக டெங்க நோயாளர்கள் அதிகம் காணப்பட்டதால் அங்கு பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அடிக்கடி இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் காரைதீவு 12ஆம் பிரிவில் அமைந்துள்ள கலைமகள் முன் பள்ளி கட்டிடத்தில் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் இடம் பெற்றது இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி கலந்து கொண்டு டெங்கு,போதைப் பொருள் சம்பந்தமாக பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வினை நடாத்தினார். இந் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகஸ்தர்கள் 12ஆம் பிரிவு கிராமசேவையாளர் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.