டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தால் வடமராட்சியில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் கிராம சேவகர் இ.கஜிதாவின் வழிநடத்தலில் கரவெட்டி கிழக்கு ஜே368 கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு டெங்குஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.