28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டெங்கை கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு பரவாமல் இருப்பதற்கான அவசியமானதும் அவசரமானதுமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வி.விஜிதரன் வழங்கினார்.
கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles