டொமினிக்கன் குடியரசில் சூறாவளி: 3 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழப்பு!

0
97

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் மழை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே வெள்ளம் காரணமாக வீதிகள், மேம்பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல பகுதிகளுக்கான மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 45 கிராமப் பிரிவுகளுக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் நேற்று பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 32 மாகாணங்களுக்கு வெள்ள அபாய மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.