சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேகநபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து அங்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது சுமார் 800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த 54 வயதுடைய குடும்ப பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து வெளிநாட்டு சிகரெட் அடங்கிய பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.