தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தற்காலிகமாக மீண்டும் பெற்றுக் கொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.பரிசீலனை நடவடிக்கைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தேவைப்பாடு என்பன குறித்து ஆராய்ந்ததன் பின்னர் துப்பாக்கிகள் அந்தந்த நபர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.