மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 982 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் 667 பொலிஸார் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது 3186 மோட்டார் சைக்கிள்களும் 2070 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அத்துடன் 6669 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 982 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.