மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1670 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் 1026 சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது 5286 மோட்டார் சைக்கிள்களும் 2970 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அத்துடன் 10,328 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1670 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.