தனியார் பேருந்து விபத்து- 27 பேர் காயம்!

0
120

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெல்மதுல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோத முற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்க முயன்ற பஸ்ஸின் சாரதி பேருந்தை திருப்ப முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 07 பேர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும், 20 பேர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.