எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு, தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்களுக்கான தபால் மூல வாக்குப் பதிவு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெறவுள்ளன.
ஒக்ரோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்கத் தவறிய முப்படையினர் மற்றும் ஏனைய
அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது பிரதேசத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.