எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் மீண்டும் இன்று கூடியுள்ளது.
தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது. இந்த நிலையில் குறித்த குழு நேற்று கூடியது. இதன்போது மாவட்டம் மாவட்டமாக வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் சிறிதரனையும், சுமந்திரனையும் களமிறக்குவதாக தீர்மானிக்கப்பட்டது. இன்னும் ஏழு பேரை வேட்பாளராக நியமிக்க வேண்டிய நிலையில் தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு மீண்டும் இன்று கூடியுள்ளது.
இன்றைய கூட்டத்தின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.