மக்கள் தமிழ் தேசிய எழுச்சியை விரும்பினால் அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, தமிழரசுக் கட்சியை அரசியல் பரப்பில் இருந்து அகற்ற வேண்டும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று டான் செய்திகளில் ஒளிபரப்பான தேர்தல் கால சிறப்பு யாவரும் கேளீர் நிகழ்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய யாவரும் கேளீர் நிகழ்சியில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழசுக் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி கே.வீ.தவராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தேர்தல் கால சிறப்பு யாவரும் கேளீர் நிகழ்ச்சி, டான் செய்திகள் அலைவிரிசையில் தினமும் இரவு 7.00 நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.