தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலான புதிய கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், புதிய கட்சிகளை இணைத்துக்கொண்டு, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று யாழில் ஒன்றுகூடி முடிவு எடுக்கப்பட்டது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்தப் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலான இந்த புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் 11 மணியளவில் கைச்சாத்திடப்படவுள்ளது.