தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினருக்கு தமிழரின் தீர்வில் கரிசனை இல்லையாம்! ரெலோ சுரேந்திரன்.

0
165

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை இல்லை ஆனால் தங்களுடைய கட்சியை வளர்க்கும் முகமான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண ரெலோ அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இயங்குவதற்காக நாங்கள் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்த அழைப்பை ஏற்று ஏனைய தமிழ் கட்சி பிரதிநிதிகள் இணைந்து பல கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார்கள் ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நிராகரித்திருந்தார்கள் வர முடியாது எனக் கூறினார்கள்

அவர்களுக்கு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் அக்கறை இல்லை தமது கட்சியினை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கிறார்கள். இன்னும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த பல விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது

இது ஒரு ஆரம்பப் புள்ளியே அதாவது தமிழ் பேசும் மக்களின் தீர்வு தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து ஆவணமொன்றை தயாரித்து இந்திய பிரதமரிடம் கையளித்துள்ளோம்.

இது ஒரு ஆரம்பப் புள்ளியே எதிர் காலத்தில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை அனைத்து கட்சியினருடனும் இணைந்து முன்னெடுக்கவுள்ளோம் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தனிப்பட்ட முயற்சியால் ஒன்றிணைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு தனி நபருக்கு சொந்தமானது அல்ல அது தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சியினருடைய ஆவணமாகவே பார்க்கப்பட வேண்டும் அதனை என்னுடைய ஆவணமோ அல்லது எனது கட்சியினுடைய ஆவணம் என போலி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.