2015ஆம் ஆண்டுக்கு முன்பாக சுதந்திரக்கட்சியுடன் இருந்து ஒட்டி உறவாடி 2015தேர்தலின் மூலம் தமிழ் தேசியஉடையைப்போட்டுக்கொண்டு யாரை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏமாற்றமுனைகின்றார் என்பதை உணரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கு இணைப்பு,சமஸ்டி,சுயநிர்ணயம் என பொய்யான விடயங்களை கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்றுக்கொண்டு இன்று ஒற்றையாட்சிக்கு இணக்கத்தை தெரிpவித்து அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.