தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஏ.எல். அன்ஸார்

0
559

தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்

கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது என தெரிவித்தார்.
மேலும்; கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை என்பதில் மயக்கம் இருக்கிறது என்றும் தமிழ் மக்களுக்கு சேவை புரியும் பிரதேச செயலகமாக கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.