தம்பிலுவில் ஸ்ரீபடபத்திரகாளியம்மன்
ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கு

0
350

அம்பாரை மாவட்டம் தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீபடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவின் திருக்கதவு திறக்கும் நிகழ்வும் கொடியேற்றமும் நேற்று இடம்பெற்றது. ஆலய தலைவர் க.சசிகாந்தன் தலைமையில் ஆலய நிருவாகத்தினர், குடிபூசை முகாமைக்காரர்கள் மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவின் கிரியைகள் யாவற்றையும் பிரதிஸ்டா பிரதம குரு தேசமான்ய அருட்கலைத் திலகம் காளிபூஜா துரந்தரர் விஸ்வ பிரம்ம ஸ்ரீ செ.சற்குணராஜா தலைமையிலான குருமார்கள் நடாத்துகின்றனர்.

வருடாந்த அலங்கார திருச்சடங்கு சக்தி விழாவினை முன்னிட்டதாக பாற்குட பவனி 09ஆம் திகதியும் வீரகம்பம் வெட்டுதல் 11ஆம் திகதியும் வீதி உலா 12ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.தம்பிலுவில் பகுதி விஸ்வப்பிரம்ம குலத்தோர் செறிந்து வாழும் முனையூர் பதியில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மனின் தீமிதிப்பு எதிர்வரும்
14 ஆம் திகதியும் எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை பால்பொங்கல் நிகழ்வும் அன்று இரவு வைரவர் வேள்வியுடனும் கிரியைகள்; நிறைவுறும்;.