தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

0
174

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தையில் கடந்த வாரம் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் விலையில் பாரியளவில் வீழ்ச்சி காணப்பட்டதுடன் மரக்கறிகள் விற்பனையாகவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளை வாங்குவதற்காக வரும் வியாபாரிகள் வருகை தராததும் எரிபொருள் தட்டுப்பாடுமே மரக்கறிகளின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகையான மரக்கறிகள் வந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ஒவ்வொரு மரக்கறியினதும் மொத்த விலை கிலோகிராமுக்கு ரூ.200ஐ தாண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.